Close

Chief Minister Special Grievance Redressal Scheme Ingratiation Advance

Publish Date : 22/08/2019

செ.வெ.எண்:-55/2019 நாள்:-22.08.2019

திண்டுக்கல் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்வு திட்டத்தினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்கள்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின்; கீழ் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்; – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி. இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் அனைத்து கிராமங்களிலும் ‘மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம்” 31.08.2019க்குள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அம்மனுக்களின் மீது தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விரைந்து தீர்வு காணுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.

மேற்காணும் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நாளைய தினம் 23.08.2019 – வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில், திண்டுக்கல் மேற்கு வட்டம், செட்டிநாயக்கன்பட்டி கிராமம், உட்கடை நந்தனார்புரம் நாடக மேடையில்; “மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம்” மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் மேற்படி திட்ட துவக்கவிழாவில் கலந்து கொண்டு, வீட்டுமனைப்பட்டா, குடிநீர்வசதி, சாலைவசதி, அடிப்படை வசதிகள் மற்றும் தேவைப்படும் சான்றுகள் மற்றும் பிற கோரிக்கைகள் குறித்து, மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளிலுள்ள அனைத்து வார்டுகளிலும் மற்றும் அனைத்து கிராமங்களிலும் 26.08.2019 திங்கள் கிழமை முதல் 30.08.2019 வெள்ளிக்கிழமை வரை அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சி மன்றம் / பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலங்களில் காலை 10.00 மணி முதல் துணை வட்டாட்சியர் / துணை வட்டார வளர்ச்சி அலுவலர் / உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் குழு நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளனர்.

எனவே, பொது மக்கள் தத்தம் பகுதிகளில் மனுக்கள் பெறும் அலுவலகங்களில்; மேற்படி அரசு அலுவலர்களிடம் மனுக்களை நேரடியாக அளித்து, ஒரு மாதகாலத்திற்குள் பொதுமக்களால் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு அரசு விதிகளுக்குட்பட்டு தீர்வு செய்து, உரிய நபர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் உரிய பலன்கள் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி, மேற்படி திட்டத்தின் மூலம் மனுக்களை அளித்து பயன்பெறலாம்; என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்