Child Labour Pledge and Signature Campaign

Publish Date : 12/06/2019
1

2

செ.வெ.எண்:- 19/2019 நாள்:- 12.06.2019
திண்டுக்கல் மாவட்டம்

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஆ.ராஜ்குமார் அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (12.06.2019) குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஆ.ராஜ்குமார் தலைமையில்; அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமான ஜீன்-12 ஐ முன்னிட்டு, இன்றைய தினம் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான கீழ்காணும் உறுதிமொழி:-

இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன். என்று அனைத்துத்துறை அரசு அலுவலர்களால் ஏற்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கையொழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கையொழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் இணை ஆணையர் திரு.லட்சுமிகாந்தன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திரு.ராமராஜ், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் (கணக்குகள்) திரு.ஜே.பி.ஜெயக்குமார், (வளர்ச்சி) திரு.சா.ஜோசப் ஆரேக்கியராஜ், (சத்துணவு) திரு.சா.சதீஸ்பாபு உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.