Child Protection Meeting

செ.வெ.எண்:-56/2022
நாள் 20.04.2022
திண்டுக்கல் மாவட்டம்
சமூக பாதுகாப்புத்துறைஇ ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்,மாவட்ட அளவிலான பணிக்குழு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் –மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறைஇ ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான பணிக்குழு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(20.04.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை உறுதி செய்தல், கொரோனா தொற்று காரணமாக ஒற்றை பெற்றோர் அல்லது பெற்றோர்கள் இருவரமு் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கழந்தைகளை பராமரிக்க பாதுகாவலர் அல்லது உறவினர் இல்லாத குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அளித்தல், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் போன்றவை குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
கொரோனா தொற்று நிவாரண உதவிகள் குழந்தைகளுக்கு வழங்குபதை மாவட்ட அளவிலான குழு கண்காணிக்க வேண்டும். குழந்தை எந்தவொரு இடையூறும் இல்லாமல் தனது படிப்பைத் தொடர்கிறதா என்பதையும், பள்ளியிலிருந்து இடைநிற்றலை தவிப்பதற்கும் சமூக பாதுகாப்புத்துறை, நன்னடத்தை அலுவலர் மற்றும் பாதுகாப்பு அலுவலர்(நிறுவனம் சாரா) ஆகியோர் மூலம் 2 மாதங்களுக்கு ஒரு முறை குழந்தையின் வீடு அல்லது பள்ளிக்குச் சென்று தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதி குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு உதவுவதை கண்காணிப்புக்குழு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி புஷ்பகலா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சிவக்குமார், குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.செல்வகுமாரி, குழந்தைகள் நலக்குழு தலைவரி திரு.சேவியர், நன்னடத்தை அலுவலர் திரு.ஜோதிமணி, சிறப்பு தத்து மையம் இயக்குநர் செல்வி கே.எஸ்.நீலா, கல்வித்துறை நேர்முக உதவியாளர் திரு.சரணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.