Close

Collector- Agri-Kalaignar Special Camp

Publish Date : 09/05/2022

செ.வெ.எண்:-14/2022

நாள்: 07.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 62 கிராம ஊராட்சிகளில் 10.05.2022 மற்றும் 07.06.2022 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப.,அவர்கள் தகவல்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் அனைத்து துறையினரும் இணைந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள 62 கிராம ஊராட்சிகளில் 10.05.2022 மற்றும் 07.06.2022 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இந்த சிறப்பு முகாம்களில் பட்டா மாறுதல், ஆறு, குளங்களில் வண்டல் மண் எடுத்தல், பயிர்க்கடன், விவசாயிகள் கடன் அட்டை பெறும் வழிமுறைகள், பயிர் காப்பீடு, கால்நடை பராமரிப்பு போன்ற விவசாயிகள் பயன்பெறும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தக்கூடிய அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

சிறப்பு முகாமில் விவசாயப் பெருமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.