Collector-Agri meeting

செ.வெ.எண்:-31/2021
நாள்:-16.09.2021
“கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம்” குறித்து மாவட்ட அளவில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம்” குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் அனைத்து துறைகள் சார்ந்த அலுவலர்களும் முழுமையாக ஈடுபட்டு திட்டத்தினை சீரும் சிறப்புமாக செயல்படுத்திட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் தொகுப்புகள் கண்டறியப்பட்டு, தொகுப்புகளில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில், அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் விவசாயிகளின் உற்பத்தியினை பெருக்கிடவும் மேலும், வருமானத்தை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்திட வழிவகுக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., வேளாண்மை இணை இயக்குநர் திரு.எஸ்.பாண்டித்துரை, வேளாண் துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) திரு.பி.சுருளியப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்) திரு.பி.ரவிபாரதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.ஜெ.பெருமாள்சாமி, திண்டுக்கல் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் திரு.ஜி.காந்திநாதன், செயற்பொறியாளர்(வேளாண்மை பொறியியல் துறை) திரு.கிருஷ்ணகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.