Close

Collector – Book’s issued for School’s library

Publish Date : 26/07/2019
1

2

செ.வெ.எண்:70/2019 நாள்:-25.07.2019

திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பீட்டிலான நூல்களை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் இன்று (25.07.2019) திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு, தனியார் பங்களிப்புடன் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டிலான நூல்களை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி தெரிவித்ததாவது:-

தமிழக அரசால் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் அறிவிக்கபட்டு, அத்திட்டங்கள் மூலம் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தி வருகிறது. பெற்றோர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றைய சமூகத்தில், கல்லூரி மாணவர்களுக்குள் யார் பெரியவர்கள் என்ற எண்ணம் மேலோங்கி, கையில் ஆயதங்களுடன் சண்டையிட்டு கொள்ளும் அளவிற்கு, அன்றாட செய்திகளில் நிகழ்வுகளை காண முடிகிறது. மாணவ, மாணவியர்கள் என்றும் அழியா சொத்தான கல்வியை பெறுவதன் மூலம் வாழ்வில் அனைத்து உயர்ந்த நிலையும் அடைந்து, தங்களது வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்தி மற்றும் தங்களது குடும்பத்தினையும் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைய செய்ய முடியும். கல்வி மற்றும் பிறதுறைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி;க் கொண்டு, திறமைகளை வளர்த்துகொள்ள வேண்டும்.

மேலும், பள்ளி ஆசிரியர்களும், தங்களது பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைய வேண்டுமென்று, மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விகிதத்தில்; மட்;டும் கவனம் செலுத்தாமல், அவர்களை ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக உருவாக்கிட தங்களது பங்களிப்பை முழுமையாக ஏற்படுத்த வேண்டும். மாணவ, மாணவியர்கள் தொலைகாட்சி, அலைபேசி உள்ளிட்டவைகளில் அதிக நாட்டம் கொள்ளாமல், உடற்கல்வி, விளையாட்டு மற்றும் புத்தக வாசிப்பு ஆகியவைகளில் கவனம் செலுத்தி, கல்வியில் மட்டுமல்லாமல் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தனியார் பங்களிப்புடன் 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு, ரூ.8 இலட்சம் மதிப்பீட்டிலான நூல்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று மேலும் 100 பள்ளி நூலகங்களுக்;கு நூல்கள் வழங்க, மேற்கண்ட கல்வி நிறுவனம் முன்வர வேண்டும். இதன் மூலம் மாணவ, மாணவியர்கள் புத்தக வாசிப்புத்திறனை மேம்படுத்திக் கொண்டு, உலக நடைமுறைகளை அறிந்து கொள்ள பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கே.சாந்தகுமார், பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி துணைத்தலைவர் திரு. ஆர்.எஸ்.கே.சுகுமாரன், கல்லூரி முதல்வர் டி.வாசுதேவன், மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்