Collector- Co-Optex Diwali Special Offer Function

Publish Date : 19/09/2019
1

செ.வெ.எண்:-40/2019 நாள்:-18.09.2019
திண்டுக்கல் மாவட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அண்ணா வணிக வளாகத்தில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்) தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்திலுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு விற்பனையை இன்று (18.09.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்து தெரிவித்ததாவது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் பல்வேறு நல்வாழ்வு திட்டங்களை நெசவாளர்களுக்கு அறிவித்து அவர்களின் பொருளாதாரத்தை மேம்பாடு அடைய செய்துள்ளார்கள்.

கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு, தொடர்ந்து 84 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவில் உள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணமாகும்.

மேலும், கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் 30மூ சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளில் மென்பட்டு சேலைகள் பருத்தி, பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்தமான ஜீன்ஸ் டாப்ஸ், குர்தா வேட்டி, சேலைகள், சுடிதார் ஆகியவை தீபாவளி பண்டிகைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப இரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் புடவை இரகங்கள் விற்பனைக்கு உள்ளது. மேலும், பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கிச் சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், பண்டிகைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன் சட்டைகள், லினன்/பருத்தி சட்டைகள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் ரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.com என்ற இணைய தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மட்டும் கடந்த ஆண்டு ரூ.97.70 இலட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.125.00 இலட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் கைத்தறித் துணிகளை வாங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மேலாளர் (அரசுத்திட்டம்) திரு.ஞானபிரகாசம், மேலாளர் (வடிவமைப்புரூஉற்பத்தி) திரு.லெட்சுமிநரசிங்கராவ், திண்டுக்கல் மேலாளர்(பொ) திருமதி.செண்பகபிரபா மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்