Close

Collector congratulate – Army soldier

Publish Date : 16/02/2022
.

.

செ.வெ.எண்:-33/2022

நாள்:15.02.2022

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா பகுதியின் செங்குத்து மலையில் 23 வயதான இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது திடீரென தவறி விழுந்ததில் மலை துவாரத்தின் முகத்தில் சிக்கி 2 நாட்களாக தவித்தார்.

பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் வேண்டுகோளின்படி, தகவலறிந்த ராணுவ வீரர்கள் கடுமையான முயற்சிக்குப் பின்னர் அந்த வாலிபரை மீட்டனர். இந்த மீட்பு குழுவில் இருந்த ராணுவ வீரர்களில் ஒருவர் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் அருகில் தேவாரப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.கே. தீபக் ஆவார். அவர் மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வாலிபரை மீட்டுள்ளார்.

வீரதீர செயல் புரிந்தமைக்காக ராணுவ வீரர் திரு.கே.தீபக் அவர்களின் சிறப்பான பணியை பாராட்டி கௌரவிக்கும் வகையில் அவருக்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(15.02.2022) நடைபெற்றது. திரு.கே.தீபக், அவருடைய தந்தை, தாய், மனைவி ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.சி.மாறன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.