Close

Collector – Congratulate Medical college selected students

Publish Date : 05/02/2022
.

செ.வெ.எண்:-10/2022

நாள்:04.02.2022

தமிழக அரசின் 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவம் பயில தேர்வு பெற்ற 4 மாணாக்கர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் பாராட்டினார்கள்.

மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்(நீட்) தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு, தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணைப்பிறப்பித்து செயல்படுத்தி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், தமிழக அரசின் 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 4 மாணாக்கர்கள் மருத்துவம் பயில (2021-2022 கல்வி ஆண்டுக்கு) இடஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், கம்பிலியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கே.சிவகாமு(காஞ்சிபுரம் செட்டிநாடு பல் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்), நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.காவியா(மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி மருத்துவக் கல்லூரி), எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.இராமகிருஷ்ணன்(கோயம்புத்தூர் கற்பகம் மருத்துவக் கல்லூரி) மற்றும் எம்.மகராஜ் (கோயம்புத்தூர் பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி) ஆகியோர் இடஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

இந்த மாணவ, மாணவிகளுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(04.02.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் மருத்துவக் கல்வி உபரகணங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கி பாராட்டினார்கள்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.சீ.கருப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்