Close

Collector – Congratulate to Police

Publish Date : 04/02/2022
.

.

செ.வெ.எண்:-09/2022

நாள்:-04.02.2022

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காவல் நிலைய சரகத்தில் சாமிதுரை(30) என்பவரை 31.01.2022 அன்று 2 பேர் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இதுதொடர்பாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், வத்தலகுண்டு காவல்நிலையம் தனிப்பிரிவு தலைமை காவலர் திரு.கே.சுரேந்திரன் மற்றும் காவலர் திரு.வி.சுதர்சன் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு, ஆயுதங்களுடன் தப்பி ஓடிய மருதுபால் சாதிக் மற்றும் உதயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியதற்காக தனிப்பிரிவு தலைமை காவலர் திரு.கே.சுரேந்திரன் மற்றும் காவலர் திரு.வி.சுதர்சன் ஆகியோருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன் முன்னிலையில் தலா ரூ.10,000 வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.