Close

Collector-Corona- Awareness week Day-4

Publish Date : 04/08/2021
.

செ.வெ.எண்:-06/2021

நாள்:04.08.2021

திண்டுக்கல் மாவட்டம்

கொரோனா விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தின் 4-வது நாளாக கொடைரோடு, சுங்கச்சாவடியில் இன்று(04.08.2021) கொரோனா விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து துவக்கி வைத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துரித நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாக கொண்டு தமிழக அரசு முழு வீச்சில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மூன்றாம் அலை வராமல் தடுக்க தற்போது பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயராமல் இருக்க பொதுமக்களிடையே பல்வேறு தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்கள். இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளுடன் இணைந்து 01.08.2021 முதல் ஒரு வாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச்சாவடியில் இன்று(04.08.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வாகனங்களில் வரும் பயணிகளுக்கு முகக்கவசங்கள், விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி காசிசெல்வி, மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் திரு.ரபீக் அகமது, துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்)மரு.நளினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.