Close

Collector Covid-19 Camp

Publish Date : 10/01/2022
.

.

.செ.வெ.எண்:-21/2022

நாள்:10.01.2022

திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், கமலா நேரு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி முகாமினை இன்று (08.01.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து தெரிவித்தாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனாவை தடுக்கும் வகையில்அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சுhகதாரத்துறை சார்பில் இதுவரை பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்கு சென்று தடுப்பூசிகள் போடும் பணியும் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மருத்துவபணியாளர்கள் 10,980 பேருக்கும், முன்களப்பணியாளர்கள் 47,700 பேருக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இணை நோய் உள்ளர்வர்கள் 90,000 பேருக்கும் என மொத்தம் 1,48,680 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி 1720248 (94.0%) நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 1207090 (65.9%) நபர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எதிர் வரும் 31.01.2022-ந் தேதிக்குள் 5639 மருத்துவபணியாளர்ளுக்கும், 11789 முன்களப்பணியார்களுக்கும், 8387 நபர்களுக்கு 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளர்வர்கள் என மொத்தம் 25815 நபர்களுக்கு தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடப்படவுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று உருமாறி ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் முன்களப்பணியாளர்கள், 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள். மேலும், முதல் தவணை மற்றும் 2-ம் தவணை எந்த வகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அந்த தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் ஆக போடப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.இந்திரா, துணை இயக்குனர்கள் (சுகாதாரப் பணிகள்) மரு.வி.யசோதாமணி(பழனி) கமலா நேரு மருத்துவமனை மருத்துவ அலுவலர் திரு.ஷரிகிருஷ்ணன் உட்பட மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்