Close

Collector-Covid vaccine s.putnic

Publish Date : 09/09/2021
.

செ.வெ.எண்:-10/2021

நாள்:07.09.2021

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள்,
திண்டுக்கல் கே.டி. மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசியாக ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்டார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் கே.டி. மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசியாக ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி செலுத்தும் பணியை இன்று(07.09.2021) பார்வையிட்டு தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா எனும் கொடிய வைரசை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பைபாஸ் சாலையில் உள்ள கே.டி.மருத்துவமனையில் ‘ஸ்புட்னிக் வி’ எனும் கொரோனா தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படுகிறது. இத்தடுப்பூசியினை முதல் தவணை செலுத்திய பின்னர், 21 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் கட்டமாக செலுத்திக்கொள்ளலாம். முதல் தவணை தடுப்பூசிக்கு கட்டணமாக ரூ.1,150 செலுத்த வேண்டும். ரஷ்யன் தயாரிப்பான இத்தடுப்பூசி உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடுகள் செல்வதற்கும், பிற அரசின் கட்டுப்பாடுகளுக்கும் பொருந்தும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வின்போது, இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்-பொறுப்பு) மரு.எஸ்.அன்புச்செல்வம், துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்), வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஏ.சீனிவாசன், மரு.மு.வரதராஜன், மரு.கே.டி.துரைமுருகன், திரு.கே.கோபால், மரு.இ.சொர்ணபிரியா, திரு.கே.டி.சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.