Close

Collector-DDAWO – Assessment Camp

Publish Date : 25/10/2021

செ.வெ.எண்:-54/2021

நாள்:25.10.2021

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் 27.10.2021 அன்று வேடசந்துர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 28.10.2021 அன்று குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 29.10.2021 அன்று வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசின் Alimco, பெங்களுர் நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் (Assessment Camp) 27.10.2021 அன்று வேடசந்துர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 28.10.2021 அன்று குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 29.10.2021 அன்று வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.

இம்முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களான, மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, தொழு நோயாளிகளுக்கான உபகரணங்கள், காலிப்பர், கிரட்சஸ், ஊன்றுகோல், செயற்கைக்கால், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான கல்வி உபகரணங்கள், காதொலி கருவிகள், பார்வையற்றோருக்கான உபகரணங்கள் ஆகியவை வழங்குவதற்கான தேர்வு முகாம் நடைபெறவுள்ளது.

மேற்காணும் உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நகல், ஆதார் அட்டை மற்றும் அதன் நகல், குடும்ப அட்டை மற்றும் அதன் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3 ஆகியவற்றுடன் முகாமில் நேரில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.