Close

Collector -DDAWO-Disability Assistance Equipment Camp

Publish Date : 20/09/2021
.

செ.வெ.எண்:-34/2021

நாள்:-19.09.2021

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அகில் பாரதீய மார்வாரிய இளைஞர் சங்கத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை கால், செயற்கை கை, கால் தாங்கிகள் தயார் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் அகில் பாரதீய மார்வாரிய இளைஞர் சங்கம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், செயற்கை கை, இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் கால் தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல் தயார் செய்யும் பணிகள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று(19.09.2021) நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாற்றுத்தினாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் பைக், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் பைக், காலிபர், CRUTCHES, செயற்கைகால், செயற்கை கை, சக்கர நாற்காலி, மூன்று சக்கரவண்டி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. காது கேளாத குழந்தைகளுக்கு காது பரிசோதனை செய்யப்படுகிறது. காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கப்பட்டு வருகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு Smartphone, ப்ரெயிலி கைகடிகாரம், ஒளிரும் மடக்குக்குச்சி, கருப்பு கண்ணாடி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அட்டை (UDID) வாரந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் அகில பாரதீய மார்வாரிய இளைஞர் சங்கம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், செயற்கை கை, இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் கால்தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல் வழங்கிட மதிப்பீட்டு முகாம் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் ஏற்கனவே நடைபெற்றது. அந்த முகாமில் உபகரணங்கள் கோரி ஏராளமான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் அளவெடுத்து தயார் செய்யும் பணிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. மொத்தம் 182 மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடித்து மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இம்முகாமில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., மற்றும் அகில பாரதீய மார்வாரிய இளைஞர் சங்கங்களின் பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.