Close

Collector – DDAWO-Special GDP

Publish Date : 24/03/2022

செ.வெ.எண்:-45/2022

நாள்:24.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிரதிமாதம் முதல் திங்கள்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலும் மற்றும் திண்டுக்கல், பழனி மற்றும் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மனுக்களுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மனுக்கள் அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.