Collector – Differently abled -GDP
செ.வெ.எண்:-35/2022
நாள்:18.03.2022
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 21.03.2022 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 21.03.2022 அன்று முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் திண்டுக்கல் கோட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, நிலக்கோட்டை, நத்தம் மற்றும் ஆத்தூர் வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மனுக்கள் அளித்து பயனபெறலாம். மேலும், மேற்காணும் கூட்டம் அரசு விடுமுறை தினம் தவிர, ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.