Close

Collector- Disabled Child Special Camp

Publish Date : 02/08/2019
1

2

செ.வெ.எண்:01/2019 நாள்:01.08.2019

திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாநகராட்சி நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப்பள்ளியில் இன்று (01.08.2019) மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவர்களுக்கு ஊன்று கோலாக திகழ்ந்து வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், அவகள் மீது தனிகவனம் செலுத்தப்பட்டு, தொடர்ந்து பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு, அவர்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, மாற்றுதிறனாளிகள் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்றைய தினம் தொடங்கப்பட்டு, இதில், பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை ஆய்வு செய்வதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் 14 ஒன்றியங்களிலும் தனித்தனியாக இன்று முதல் ஆகஸ்ட்-30 வரை நடைபெறவுள்ளது.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, உள்ளடங்கிய கல்வித்திட்டத்தின் சார்பில் 0-18 வயது வரை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர். இக்குழந்தைகளுக்குத் தேவையான நலத்திட்டங்கள், கல்வி கற்கும் வாய்ப்புகளை தமிழக அரசு நன்முறையில் செயல்படுத்தி வருகின்றது. அதன் ஒருபகுதியாக வருடந்தோறும் மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டு, புதிய அடையாள அட்டை வழங்குதல், உதவி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டும், இச்சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இம்முகாம்களில் மனநல மருத்துவர், எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர், கண்கிசிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் மூலம் தேசிய அடையாள அட்டை வழங்குதல், உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தெகை வழங்குதல், கல்வி உதவித்தொகை வழங்குதல், பேருந்து, ரயில் சலுகை பயணச்சான்று மற்றும் உதடு அன்ன பிளவு, அறுவை சிகிச்சை தொடர்பான உதவிகள் வழங்கவும் இம்முகாம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபோன்று, மாற்றுதிறனாளிகளுக்கென அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுதிறனாளிகள் அறிந்து கொண்டு அதன்மூலம் பயன்பெற வேண்டும். இதுதவிர பிரதிவாரம் திங்கள் கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது கோரிக்கை மனுக்களையும் அளித்து தீர்வு காணலம். என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இம்முகாமில், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.மாலதிபிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) திரு.சுவாமிநாதன், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) திரு.ஜான்பிரிட்டோ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சாமிநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.