Close

COLLECTOR-DRDA-Awareness

Publish Date : 15/09/2021
.

செ.வெ.எண்:-26/2021

நாள்:-15.09.2021

திண்டுக்கல் மாவட்டம்

75-வது சுதந்திரத் தினத்திருவிழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) – தூய்மையான சுகாதாரமான ஊராட்சிகளை உருவாக்குதல். 75-வது சுதந்திரத் தினத்திருவிழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின், முதல் நிகழ்வாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரத்தை, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.விசாகன், இ.ஆ.ப. அவர்கள் இன்று(15.09.2021) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்ஃகூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்; கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

விழிப்புணர்வு நிகழ்வாக தூய்மை உரையாடல் நிகழ்ச்சி, 15.08.2021 முதல் 15.08.2022 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, மலக்கசடு மேலாண்மை, நெகிழிக் கழிவு மேலாண்மை (ODF Plus Components) குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

திரவ கழிவு மேலாண்மை விழிப்புணர்வு தொடர்பாக 10 நாள் விழிப்புணர்வு பிரச்சாரம், 25.08.2021 முதல் கிராம ஊராட்சிகளின் சுகாதாரம் குறித்த தற்போதைய நிலை மற்றும் ஒட்டுமொத்த கிராம சுகாதார விவரம் அடங்கிய அட்டவணையை தயார் செய்து, முதற்கட்டமாக மாவட்டத்திற்கு ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முழுமையான கழிவு நீர் மேலாண்மை அணுகு முறை மூலம் சாம்பல் நீர் மேலாண்மையினை செயல்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டு, அதனை முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.

தூய்மை ரதம் 15.09.2021 முதல் 02.10.2021 வரை மாவட்ட அளவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

தூய்மையே சேவை 15.09.2021 முதல் 02.10.2021 வரை தூய்மை தமிழகம் கைபேசி செயலி மூலம் சுகாதார ஊக்குநர்களுக்கு திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை பற்றிய “4R கொள்கையினை” (Reduce, Recycle, Reuse and Recover) குறித்து நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டு, ஊராட்சி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தன்னார்வலர்கள் (Shramdhaan) கொண்டு நெகிழிக் கழிவு மேலாண்மை, மக்களை ஈடுபடுத்தி செயல்பட உள்ளது. மாணவர்களுக்கு திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் குறித்து கவிதை எழுதுதல் மற்றும் ஓவியம் வரையும் போட்டி நடத்தப்பட உள்ளது. கிராம ஊராட்சிகளின் முக்கியமான பகுதிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் /கட்டிடங்களில் சுகாதாரம் குறித்த பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளின் ஒட்டியுள்ள பகுதிகளில் (By the sides of National Highways) உள்ள சுவர்களில் “தூய்மை பாரதம்” தொடர்பான சுவர் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

சமுதாயத்திற்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் 02.10.2021 அன்று சிறப்பு கிராம சபை நடத்த திட்டமிடப்பட வேண்டும்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தினத் திருவிழா, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தை அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கமற்ற கழிவுகளற்ற தூய்மையான, ஆரோக்கியமான கிராம ஊராட்சிகளாக மாற்றிட பங்கேற்று பயன்பெற வேண்டும். அதன்படி,

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி 13.09.2021 முதல் 30.09.2021 வரை நடத்தப்படுகிறது.

306 ஊராட்சிகளில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டச் செயல்பாடுகளை மேற்கொள்ள பிரிக்கப்பட்டுள்ள 961 தொகுதிகளில் (Cluster) திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தற்போதைய நிலை குறித்து புள்ளி விவரம் சேகரித்தல் 25.09.2021 முதல் 30.12.2021 வரை நடத்தப்பட உள்ளது.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளில் கழிவுநீர் மேலாண்மை திட்டத்தினை நிறைவடைதல் அணுகுமுறையில் மேற்கொள்ள புள்ளிவிவரம் சேகரித்தல், திட்டமிடுதல், கண்காணித்தல், பயிற்சி அளித்தல் செயல்பாடுகள் 13.09.2021 முதல் 30.12.2021 வரை மேற்கொள்ளப்படுகிறது.

திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கம் அற்ற நிலையான நிலைத்த தன்மைக்கான கூடுதல் செயல்பாடுகளை(ODF Plus) உள்ளடக்கிய விழிப்புணர்வு வாகனம் (மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக அதிநவீன மின்னணு வாகனம்) மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் 15.08.2021 முதல் 02.10.2021 வரை நடத்தப்பட உள்ளது.

தூய்மையே சேவை விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொள்தல் தொடர்பாக ஊக்குவிப்பாளர்கள் மூலம் வீடு வீடாக சென்றும்,SHG/PLF/VPRC-களில் திட மற்றும் திரவ கழிவுகளை குறைத்தல், மறுசுழற்சி செய்தல், மறுஉபயோகம் செய்தல் மற்றும் அகற்றுதல் முறையில் பாதுகாப்பாக அகற்றுதல் குறித்து தூய்மை தமிழகம் செயலி வழியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் 15.09.2021 முதல் 30.09.2021 வரை மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வீடுகள், தெருக்கள், பொது இடங்கள், கடைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனப் பகுதிகளில் (பள்ளி, அங்கன்வாடி, இதர அரசு அலுவலகங்கள்) தீவிர துப்பரவு முகாம்; 16.09.2021 அன்று நடத்தப்பட உள்ளது.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை குறித்து கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் ஒவியப் போட்டிகள் 20.09.2021 மற்றும் 21.09.2021 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

ஊராட்சியிலுள்ள அனைத்து மக்களும் பார்த்து பயனடையும் வகையில் திட, திரவ கழிவு மேலாண்மை குறித்த கைபிரதிகள் விநியோகம் செய்ததில், அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக விழிப்புணர்வு பதாகைகள் நிறுவுதல் 25.09.2021 அன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 02.10.2021-ஆம் தேதியன்று கிராம சபை நிகழ்வில் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தி.நிவாஸ்கான், உதவி திட்ட அலுவலர் (வீட்டுவசதி மற்றும் சுகாதாரம்) திரு.எம்.பிரகாஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.மு.இராமாநிதி மற்றும் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.