Close

Collector – DSO -Award for the Third Gender

Publish Date : 16/03/2022

செ.வெ.எண்:-28/2022

நாள்:16.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

திருநங்கையருக்கான முன்மாதிரி விருது பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திருநங்கைகள் இச்சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் மற்றும் திருநங்கையர்களை ஊக்குவிக்கும் வகையில் 2021-2022-ஆம் நிதியாண்டில் திருநங்கையருக்கான முன்மாதிரி விருதானது ரூ.1,00,000 காசோலை மற்றும் சான்று ஏப்ரல்-15ம் தேதியன்று வழங்கப்படும்.

மேற்படி விருதுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தின் (awards.tn.gov.in) மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

2021-2022-ஆம் நிதியாண்டிற்கான திருநங்கையர் தின விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:

திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

மேற்கண்ட தகுதியுடைய திருநங்கைகள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.