Close

Collector-Election control room

Publish Date : 20/09/2021

செ.வெ.எண்:-33/2021

நாள்:-19.09.2021

தற்செயல் ஊரக உள்ளாட்சித் தேர்தல்-2021 தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு, கட்டணமில்லா லைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தற்செயல் ஊரக உள்ளாட்சித் தேர்தல்-2021 தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் (கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-425-0752) கொண்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், தேர்தல் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின், தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மேற்கண்ட கட்டமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.