Collector- Exwel-PMSS Scholarship
செ.வெ.எண்:-13/2022
நாள்:07.02.2022
பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2021-22 கல்வியாண்டில் தொழிற்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பட்டப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் சிறார்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2021-22 கல்வியாண்டில் தொழிற்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பட்டப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் சிறார்கள் பயன்பெறும் வகையில் முன்னாள் படைவீரர்களின் பெண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.3,000/- (ரூ.36,000/- ஆண்டுக்கு) மற்றும் ஆண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.2,500/-(ரூ.30,000/-ஆண்டுக்கு) என்ற விதத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.ksb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்திட 28.02.2022 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கு பாரத மாநில வங்கி (SBI) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஆகிய இரண்டு வங்கிகளில் மட்டும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெயரில் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் சிறார்கள் பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அதிக அளவு விண்ணப்பித்து பதிவு செய்த விபரங்களை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.