Collector-Fire service Team

செ.வெ.எண்:-28/2021
நாள்:-15.09.2021
திண்டுக்கல் மாவட்டம்
100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த முதியவரை மீட்ட மீட்புக் குழுவினரை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், நாச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவர் மாணிக்கம் என்பவர் 10.09.2021 அன்று இரவு தவறி விழுந்துவிட்டார். இதுகுறித்து, குஜிலியம்பாறை, தீயணைப்பு – மீட்புப் பணிகள் நிலையத்திற்கு 10.09.2021 அன்று இரவு 9.00 மணியளவில் தகவல் பெறப்பட்டது.
தகவலறிந்தவுடன், தீயணைப்பு நிலைய மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பார்த்தபோது, அங்கு சமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் முதியவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே, மீட்புக்குழுவினர் பாதுகாப்புடன் கிணற்றுக்குள் இறங்கி அந்த முதியவரை உயிருடன் மீட்டனர்.
கிணற்றுக்குள் முட்புதர்கள் நிறைந்து இருந்ததால், தீணைப்பு வீரர்களுக்கு மீட்புப் பணி பெரும் சவாலாக இருந்தது. பெரும் சிரமத்திற்கு இடையே முதியவரை மீட்டு வெளியே கொண்டு வந்த மீட்பு குழுவினரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(14.09.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு.த.வெங்கட்ரமணன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.