Close

Monday Grievance Day Petition Meeting (04/10/2021)

Publish Date : 04/10/2021
.

...

செ.வெ.எண்:-10/2021

நாள்:04.10.2021

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (04.10.2021) நடைபெற்றது. இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 232 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.

தமிழக அரசின் உத்தரவின்படி பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம்; நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் பொதுமக்களின் உடல் வெப்பநிலை குறித்து பரிசோதனை செய்யப்பட்டும், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தும், மனு அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றியும் அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார். மேலும், பெறப்பட்ட தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 27.09.2021 அன்று நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின்கீழ் காப்பீட்டு அடையாள அட்டை வழக்கும் நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டம், மேற்கு வட்டம், கோடல்வாவி கிராமத்தில் வசிக்கும் திரு.நல்லசாமி என்பவர் தனக்கு முதியோர் உதவித்தொகை வேண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடன் மனு அளித்திருந்தார். இம்மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திரு.நல்லசாமி அவர்களுக்கு, இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் முதியோர் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் அஞ்சல், 3.1.10 ராமசாமி சேர்வை தெரு என்ற முகவரியில் வசித்து வரும், சுதந்திர போராட்ட தியாகி திரு.பி.ராஜ் மாவிலியார் அவர்கள், தங்களுக்கு தங்குவதற்கு வீடு வேண்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடன் மனு அளித்தார். இம்மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகி திரு.பி.ராஜ் மாவிலியார் அவர்களுக்கு இலவச வீட்டுமனை திட்டத்தின்கீழ் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் திரு.ளு.பிரபு,இ.வ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர் திருமதி.பிரியங்கா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சி.மாறன், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.