Close

Collector- GDP Press Release

Publish Date : 12/03/2020
gdp932020

gdp9320201

செ.வெ.எண்:-11/2020                                                                                                                                                                                                                              நாள்:09.03.2020
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள்; அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (09.03.2020) நடைபெற்றது. இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 365 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.

தமிழக அரசின் உத்தரவின்படி பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிட அம்மா திட்ட முகாம், மக்கள் தொடர்பு முகாம், சிறப்பு குறைதீர்க்கும் முகாம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம்; நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை பெற்றுக் கொண்டும், இதற்குமுன் பெறப்பட்ட மனுக்களின் மீதும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றைய மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கடந்த 02.03.2020 அன்று திரு.வருசை மைதீன் அவர்களிடமிருந்து பெறப்பட்ட மனுவின் மீது மேற்கொள்ளப்பட்ட உரிய விசாரனையின் அடிப்படையில் பயனாளிக்கு மாற்றுதிறனாளிகளுக்காக மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணையினையும், கடந்த 24.02.2020 அன்று மாற்றுத்திறனாளி திருமதி பொன்னம்;மாள் அவர்களிடமிருந்து பெறப்பட்ட மனுவின் மீது விசாரனை மேற்கொள்ளப்பட்டு பயனாளிக்கு சுயதொழில் புரிந்தி;ட மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.20,000-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஆர்.ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) திரு.சிவக்குமார், உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.