Close

Collector- Government Hospital Inspection

Publish Date : 05/04/2022
.

செ.வெ.எண்:-08/2022

நாள்:05.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

.

.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(05.04.2022) ஆய்வு மேற்கொண்டார்.மருத்துவமனை வளாகத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளுக்கு பதிவுச்சீட்டு வழங்குமிடம், பரிசோதனை மேற்கொள்ளும் இடம், மருந்து வழங்குமிடம், உள்நோயாளிகள் பிரிவு, ஸ்கேன் பரிசோதனை மையம், மகப்பேறு பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு உட்பட அனைத்து பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் இறுதிக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டார்.மருத்துவமனை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கட்டடப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் தற்போதைய நிலை உள்ளிட்ட தகவல்களை பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனை வளாகம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு தயார் செய்யுமிடம், சமையல் பொருட்கள் வைப்பறை, உணவு வழங்குமிடம், உணவு அருந்துமிடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், இது பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லுமிடம் என்பதால், இங்கு உணவு வகைகளை சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும் என அங்குள்ள பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

.

.

இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலர் மரு.கே.கே.விஜயகுமார், கண்காணிப்பாளர் திரு.வீரமணி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் திரு.சுரேஸ்பாபு, உறைவிட மருத்துவ அலுவலர் மரு.சந்தானகுமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.ரபீக்அகமது, பொதுப்பணித்துறை (ம.ப.) உதவி செயற்பொறியாளர் திரு.பாண்டியராஜன், உதவிப்பொறியாளர் திரு.மனோகரன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.