Collector-Gramashaba meeting

செ.வெ.எண்:-67/2022
நாள்:24.04.2022
திண்டுக்கல் மாவட்டம்
தோட்டனூத்து, அடியனூத்து ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டார்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், தோட்டனூத்து மற்றும் அடியனூத்து ஊராட்சிகளில் இன்று(24.04.2022) நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் அனைவரும் கிராமசபைக் கூட்டம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-
அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை சூழல், வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தல் வேண்டும். அனைத்து குழந்தைகளும், வாழவும், வளரவும், பங்கேற்கவும் தேவையான பாதுகாப்பு அளித்து வருவதன் மூலம் அவர்களின் முழு திறன்கள் வெளிவரும் வகையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல், அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.இந்நிகழ்ச்சிகளில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.சி.ரெங்கராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.கிருஷ்ணன், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திருமதி கீதா, தோட்டனூத்து ஊராட்சி தலைவர் திருமதி சித்ரா ராதாகிருஷ்ணன், அடியனூத்து ஊராட்சி தலைவர் திரு.எஸ்.ஜெயராமன், துறை அலுவலர்கள், ஊராட்சி பொதுமக்கள் பலர் உள்ளனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.