Close

Collector- Gramma Saba Meeting

Publish Date : 01/10/2020

செ.வெ.எண்:-36/2020

நாள்:-30.09.2020

திண்டுக்கல் மாவட்டம்

காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு 02.10.2020 ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

காந்தி ஜெயந்தி தினத்தன்று (02.10.2020) திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது.

இக்கிராமசபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல்;கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்பு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து விவாதித்தல்,ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்,குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல்,ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல்,ஊட்டச்சத்து இயக்கம் (POSHAN ABHIYAAN),பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

எனவே, ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தவறாது ஊராட்சியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.