Collector Inspection

செ.வெ.எண்:- 05/2025
நாள்:-03.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
ஆயக்குடி பேரூராட்சி மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி பேரூராட்சி மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆயக்குடி பேரூராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நுாலகம் கட்டடம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு மற்றும் தரம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கன்வாடி மையத்தில் மாணவர்களின் வருகை பதிவுகள் மற்றும் எடை மற்றும் உயரத்தினை இணைதளத்தில் பதிவு செய்யப்பட்ட விபரத்தினை ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆயக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் சத்துணவு மையங்களை ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கிடவும், கழிவுநீர் கால்வாயை சுகாதாரமாக பராமரிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அமரபூண்டி ஊராட்சியில் உள்ள மந்தைக்குளத்தில் ரூ.6.16 இலட்சம் மதிப்பீட்டில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமரபூண்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்தில் ரூ.44.01 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மேலகோட்டை ஊராட்சியில் 15வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பொதுக்கழிப்பறை கட்டுமான பணிகள், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெத்தநாயக்கப்பட்டி ஊராட்சியில் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள மக்களின் தேவைகளை கேட்டறிந்தார். அந்தப் பகுதியில் பொதுமக்களக்குத் தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் தெரு விளக்குகள் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் பெத்தநாயக்கப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ஆதார் பதிவு சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பெத்தநாயக்கப்பட்டியில் டான்சி தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பழனி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வேதா, திருமதி நளினா, பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.