Close

Collector inspection

Publish Date : 07/12/2021
.

செ.வெ.எண்:-17/2021

நாள்:07.12.2021

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.82 லட்சத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றும் வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(07.12.2021) கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டி ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.26.28 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்தி 313 தனிநபர் வீட்டு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தண்ணீர் கிடைக்கும் அளவு மற்றும் பகிர்மானம் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், அணைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி, அதன் பயன்பாடு, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள், குழந்தைகளுக்கு சமைக்கப்பட்டுள்ள உணவு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதனைத்தொடர்ந்து, அ.வெள்ளோடு ஊராட்சியில் பாரத பிரதமரின் குடியிருப்பு திட்டம்/ பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் கட்டுமான பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம், ஆட்டுக்கொட்டகை மற்றும் தனிநபர் உறுஞ்சுகுழி பணிகள் என மொத்தம் ரூ.82 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர்(ஊ.வ.), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.