Close

Collector Inspection

Publish Date : 06/04/2022
.

செ.வெ.எண்:-12/2022

நாள்:06.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

உலுப்பங்குடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

.

.

திண்டுக்கல் மாவட்டம், உலுப்பங்குடி ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.17.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(06.04.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான பணி, பணியின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதனைத்தொடர்ந்து, உலுப்பங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதம், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக தேவைப்படும் வசதிகள், கட்டட வசதிகள், சுற்றுப்புற பகுதிகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியத்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.