Close

Collector Inspection

Publish Date : 20/07/2022
.

செ.வெ.எண்:-53/2022

நாள்: 19.07.2022

திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்;டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள்; நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா ஆகியோர் உடனிருந்தனர்.

ஓட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் விருப்பாட்சியில் சமத்துவபுரத்தில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் புதுப்பிக்கும் பணிகள், சமுதாயக்கூடம் புதுப்பிக்கும் பணிகள், சாலை புதுப்பிக்கும் பணிகள்,துவக்கப்பள்ளி புதுப்பிக்கும் பணிகள் உட்பட பல்வேறு பணிகள் ரூ.95 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.3 கோடியே 8 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய புதிய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறை, அலுவலக வளாகம், கூட்டரங்கம், கழிப்பிடம், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கான வசதிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, இப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.காமராஜ் அந்தோணி, ஒன்றிய பொறியாளர்கள் திரு.விஜயராகவன், அன்புச்செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.