Collector’s inspection at Election Polling (local body)

செ.வெ.எண்:-20/2021
நாள்:-09.10.2021
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்செயல் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்செயல் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இன்று(09.10.2021) வாக்குப்பதிவு நடைபெறும் திண்டுக்கல் அங்குநகர், அங்கிங்கு மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.06.2021 தேதி வரையில் காலியாக உள்ள 28 பதவியிடங்களுக்கான தற்செயல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்குப்பதிவு செய்ய தேவையான அனைத்து வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மலரவன் உட்பட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.