Collector Inspection at nilakottai for awareness of covid 100% vaccination

செ.வெ.எண்:-15/2021
நாள்:06.10.2021
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாலையகவுண்டன்பட்டி, சக்கையநாயக்கனூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் 100 சதவிகித கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து, இன்று (06.10.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தகுதியுள்ள பொதுமக்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில், 14 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராம பகுதிகளில், பொதுமக்களிடையே தடுப்பூசி அனைவரும் போடப்பட வேண்டும் என்பதற்காக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாலையகவுண்டன்பட்டி, சக்கையநாயக்கனூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில், கொரோனா தடுப்பூசி 100 சதவிகிதம் போட வேண்டியதின் அவசியம் குறித்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்தார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.சீனிவாசன்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், குறிப்பாக, மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி பகுதியில் மொத்தம் உள்ள 3780 நபர்களில், இன்னும், எஞ்சியுள்ள தடுப்பூசி போடப்படாத, 526 நபர்கள் அனைவருக்கும், தடுப்பூசி செலுத்த வேண்டுமென, மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி J.மாயக்காள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் திரு.A.ஜான் இன்னாசி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திரு.K.மாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திருமதி ஜெனிதா மற்றும் ராஜசேகரன், சோ.சுரேஷ்குமார் (ஊராட்சி செயலர்) ஆகியோருடன் ஆலோசனை செய்தார்கள்.
மேலும், தடுப்பூசி போடப்படாத நபர்களிடம், தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்தும், தடுப்பூசி போடாமல் நோய்கள் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் பின் விளைவுகள், பொருளாதார இழப்புகள், மன உளைச்சல் ஆகியவை குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தகுந்த அறிவுரை வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து, சக்கையநாயக்கனூர் ஊhட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மூலதான மானிய நிதிதிட்டத்தின்கீழ், அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியினை பார்வையிட்டு, அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பவுன்தாய் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.கிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுலர்களுடன் அப்பகுதியில் அனைவருக்கும் 100 சதவிகித கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள், தடுப்பூசி போடப்படவேண்டியதன் அவசியம் குறித்த, தகுந்த ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.