Close

Collector Inspection at Sirumalai

Publish Date : 29/12/2021
.

..

செ.வெ.எண்:-69/2021

நாள்: 28.12.2021

சிறுமலை ஊராட்சி பழையூர் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ரூ.33 இலட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் செயற்கை அருவி மற்றும் சிறுமலை பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை ஊராட்சி பழையூர் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ரூ.33 இலட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் செயற்கை அருவி மற்றும் சிறுமலை பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு.எஸ்.பிரபு, இ.வ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (28.12.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்;டம், சிறுமலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காகவும், சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும் பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பழையூர் பகுதியில் ரூ.20 இலட்சம் செலவில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதனையொட்டி, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தடுப்பணையில், ரூ.33 இலட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் செயற்கை அருவியில், நீர் நிறைந்து அருவியாக வழிந்தோடுவதை, பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், அருவியினை மேலும், சிறப்பாக அமைத்திட தகுந்த அறிவுரைகளை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து, சிறுமலை புதூர் பகுதியில் மலைவாழ் மக்களுக்கு தலா ரூ.3 இலட்சம் மதிப்பில் 18 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வரும் பணியினை பார்வையிட்ட, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சிறுமலை ஊராட்சிக்குட்பட்ட தென்மலை பகுதியில் சுற்றுலா மேம்பாட்டிற்காக 120 ஏக்கர் பரப்பளவில் வனத்துறையின் சார்பில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பல்லுயிர் பூங்கா பணியினை பார்வையிட்டு, சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கு வசதிக்காக, சிறுவர் பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மலர் கண்காட்சியினை ஏற்படுத்தவும் வனத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். மேலும், சுற்றுலா பயணிகள் இயற்கையின் அழகினை கண்டுகளிப்பதற்காக, அங்கு அமைக்கபட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.

முன்னதாக, திண்டுக்கல் மாவட்டம், அடியனூத்து பகுதியில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ், அரசு மானியத்துடன் விவசாயி திரு.குமார் அவர்களின் தோட்டத்தில் பசுமைக்குடிலில் அமைக்கபட்டுள்ள வெள்ளரி சாகுபடி, மழை நீர் சேகரிப்பு பண்ணைக்குட்டை அமைத்தல் பணியினையும் விவசாயி திரு.பவுல்ராஜ் அவர்களின் தோட்டத்தில் பசுமை குடிலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ரோஜா மற்றும் குடை மிளகாய் பயிர்களையும் மேலும், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டை மற்றும் சிப்பம் கட்டும் அறை ஆகியவற்றை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், விவசாயிகளிடம் சாகுபடி குறித்த விபரங்களை கேட்டறிந்தார்கள்.

நடைபெற்ற ஆய்வின் போது, துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை திரு.ஜெ.பெருமாள்சாமி, துணை தோட்டக்கலை அலுவலர் திரு.பி.முருகரசு, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திருமதி.சந்தனமேரி கீதா, உதவி பொறியாளர் திரு.யு.முருகன், ஒன்றிய பொறியாளர் எம்.ராஜேந்திரன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.எஸ்.கிருஷ்ணன், திரு.டி.மலரவன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.