Collector inspection-Authoor Union

செ.வெ.எண்:-50/2022
நாள்:19.04.2022
திண்டுக்கல் மாவட்டம்
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(19.04.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், சித்தரேவு கிராமத்தில் பாரதப் பிரதமர் கிராம குடியிருப்புத் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து அங்குள்ள நியாயவிலைக் கடையில் பொருட்கள் விநியோகம், பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் மணலூர் ஊராட்சியில் பெரும்பாறை கிராமத்தில் ரூ.7.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சாலையோர தடுப்புச் சுவர் கட்டுமான பணி மற்றும் ரூ.23.56 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான பணிகளை தரமாகவும், குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமதி ஹேமலதா மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஏழுமலையான், திரு.தட்சிணாமூர்த்தி, உதவிப் பொறியாளர்கள் திரு.முருகபாண்டி, திரு.ராமராஸ், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி லதா, துணைத்தலைவர் சுருளிராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.