Close

Collector Inspection – Dindigul block

Publish Date : 04/06/2025
.

செ.வெ.எண்:-07/2025

நாள்:-03.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திறகுட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், குரும்பப்பட்டி ஊராட்சி, இராமையம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், காலை உணவு திட்டம் சமையலறை மற்றும் பொருட்கள் வைப்பறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராமின் அவாஷ் யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணிகள் மற்றும் மற்றும் இராமையம்பட்டி குளத்தை மேம்படுத்துதல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அடியனுாத்து ஊராட்சி, தோமையார்புரத்தில் துாய்மை இந்தியா திட்டத்தில்(கிராமம்) அடியனுாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 2 சுகாதார வளாகங்கள் மற்றும் தோமையார்புரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய நாடகமேடை கட்டுமான பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், ஏ.வெள்ளோடு ஊராட்சி, நரசிங்கபுரத்தில் துாய்மை பாரத இயக்கம்(கிராமம்) திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நுண் உரம் தயாரிப்பு பணிகள், நெகிழி கழிவுகள் சேமிப்பு கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தேவரழகன்பட்டியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கூடுதல் நர்சரி வளாகம் மற்றும் சவேரியர்தோட்டம் முதல் நரசிங்கபுரம் வரை கால்வாய் சீரமைப்பு பணிகள், ஊரக குடியிருப்புகள் பழுது பார்க்கும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, திண்டுக்கல் கிழக்கு வட்டம், திண்டுக்கல் நகர் பகுதிகளில் பாறைமேட்டுத் தெரு மற்றும் நெட்டுத்தெரு ஆகிய நகர் புறங்களில் குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவது தொடர்பான இடங்களை ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திரு.பாண்டியராஜன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அண்ணாத்துறை, திரு.ராஜசேகர், பொறியாளர் திரு.பாலசுப்பிரமணி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.