Close

Collector Inspection – Kodaikkanal Kudimaramathu works (DRDA)

Publish Date : 21/08/2019
1

2

செ.வெ.எண்: 51/2019 நாள்:21.08.2019

திண்டுக்கல் மாவட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக குடிமராமத்து திட்டத்தின்கீழ் குளம் மற்றும் குட்டைகள் சீரமைக்கும் பணிகள் குறித்து இன்று (21.08.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் நீர் வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும், தமிழக அரசால் தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் நீர்நிலை மறுசீரமைப்பு பணிகளை தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ஊரக வளர்ச்சி கட்டுப்பாட்டிலுள்ள சிறு பாசன குளங்கள், ஊரணிகள், மற்றும் குட்டைகளை தூர்வாரி ஆழப்படுத்தி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.

அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக 280 சிறு பாசன குளங்கள் ரூ.14 கோடி மதிப்பீட்டிலும், 380 ஊரணிகள் மற்றும் குட்டைகள் ரூ.3.80 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 640 புனரமைப்பு பணிகள் ரூ.17.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள, தற்போது நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.

அதன்படி, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக குடிமராமத்து திட்டத்தின்கீழ் மன்னவனூர் ஊராட்சியில் உடம்பகுளம், பூண்டி ஊராட்சியில் அருங்காட்டுகுளம் மற்றும் செம்மண்குளம், வடகவுஞ்சி ஊராட்சியில் முரள்குளம், வில்பட்டி ஊராட்சியில் அல்லிஓடை குளம் மற்றும் அட்டுவம்பட்டி கிரஸ் குட்கிராமத்தில் உள்ள குளம் ஆகியவைகளில் தலா ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் என ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டு, அதனை ஆழப்படுத்தி, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்கண்டவாறு நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக, வில்பட்டி ஊராட்சி அல்லிஓடை குளத்தில் ஆய்வு மேற்கொள்ளபட்;டது.

மேற்கண்டவாறு நடைபெற்று வரும் நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளை, பருவ மழைக்கு முன்பாக விரைந்து முடித்து, அரசின் அறிவிப்பிற்கிணங்க, ஒரு துளி மழைநீரைக்கூட வீணாக்காமல் சேமிக்கும் வகையில், பணிகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கும் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, கொடைக்கானல், நாயுடுபுரம் பகுதியில் உள்ள நியாயவிலை கடையின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள்;, இருப்புகள் மற்றும் பதிவேடுகள்;, ஸ்மார்ட் கார்டு பதிவுகள் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்; ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில், கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பாண்டி மற்றும் திரு.கிருபாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.