Close

Collector Inspection (Sirumalai)

Publish Date : 19/01/2022
.

செ.வெ.எண்:-36/2022

நாள்: 15.01.2022

சிறுமலை ஊராட்சி பழையூர் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ரூ.33 இலட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் செயற்கை அருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை ஊராட்சி பழையூர் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ரூ.33 இலட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் செயற்கை அருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் இன்று (15.01.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்;டம், சிறுமலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காகவும், சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும் பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சிறுமலை பழையூர் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தடுப்பணையில், ரூ.33 இலட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் செயற்கை அருவியில், நீர் நிறைந்து அருவியாக வழிந்தோடுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

நடைபெற்ற ஆய்வின் போது, உதவி பொறியாளர் திரு.யு.முருகன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.எஸ்.கிருஷ்ணன், திரு.டி.மலரவன், சிறுமலை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.சங்கீதாவெள்ளிமலை உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.