Close

Collector Inspection

Publish Date : 28/09/2021
.

செ.வெ.எண்:-55/2021

நாள்:-28.09.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மானிய திட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மானிய திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை இன்று(28.09.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் 2000 சதுர மீட்டர் அளவில் பசுமைக்குடில் அமைத்து, அதில் எப்-1 உயர்ரக 4000 எண்ணிக்கை வெள்ளரி செடிகள், சொட்டுநீர் பாசன முறையில் நடவு செய்யப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், வெள்ளரி விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்படும் வழிமுறைகள் மற்றும் கொரோனா காலகட்டத்தில் விற்பனை விலை தொடர்பாக கேட்டறிந்தார்கள். மேலும், ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூறினார்கள்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர், சீவல்சரகு கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ், 2021-2022-ஆம் ஆண்டு குறைந்த அளவிலான செலவின வெங்காய பட்டறை ரூ.87.500/- மானியத்தில் செயல்படுத்தப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்

ஆத்தூர் வட்டத்தில் நூண்ணீர் பாசனத் திட்டம் -2020-2021 தென்னைக்கு சொட்டுநீர்ப்பாசன அமைத்து, அதற்கு நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் மானியம் ரூ.33.297/- மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பாயைங்கோட்டை கந்தசாமிபுரத்தில் ரூ.13.20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 1 இலட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறையின் மாநில விரிவாக்கத்திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத்திட்டம் 2021-2022 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் சார்பில் ரூ.4 ஆயிரம் மானிய விலையில் வழங்ப்பட்டுள்ள தென்னை மரங்கள் ஏறும் கருவி, தென்னை மட்டைகளை துண்டாக்கும் ஊர்தி கருவி ஆகியவற்றின் செயல்முறைகளையும் ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

சித்தையன்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடை மற்றும் நியாயவிலைக்கடை கடை எண் 3 AP045 ஆகிய கடைகளில், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் நியாயவிலைப் பொருட்கள் இருப்பு, எடை இயந்திரம் மற்றும் பதிவேடுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர்(வேளாண்மை) திரு.S.பாண்டித்துரை, துணை இயக்குநர்( தோட்டக்கலை) திரு.J.பெருமாள்சாமி, உதவி இயக்குநர்(தோட்டக்கலை) திரு.K.கணேசன் (ஆத்தூர்), துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டங்கள்) திருமதி C.அமலா, (உழவர் பயிற்சி நிலையம்) திருமதி P.விஜயராணி, துணை இயக்குநர் (வேளாண்மை மாநில திட்டம்) திரு.P.சுருளியப்பன் மற்றும் ஆத்தூர் வட்டாட்சியர், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.