Close

Collector – ITI (women) ADMISSION

Publish Date : 21/08/2020

செ.வெ.எண்:-13/2020

நாள்:19.08.2020

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) ஐ.டி.ஐ., மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) ஐ.டி.ஐ., மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது.

NCVT சான்றிதழ் தொழிற்பிரிவுகளான கம்மியர் கருவிகள்(Instrument Mechanic) 2 ஆண்டுகள் படிப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு (Information & communication Technology & System Maintenance) 2 ஆண்டுகள் படிப்பு, கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (Computer Operator and Programming Assistant) ஒரு ஆண்டு, டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர் (Desktop Publishing Operator) ஒரு ஆண்டு, நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் (Fashion Design & Technology) ஒரு ஆண்டு ஆகிய தொழிற்பிரிவுகளில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தையல் வேலை தொழில்நுட்பம் (Sewing Technology), அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம் Surface Ornamentation Technique (Embroidery) ஆகிய ஒரு ஆண்டு தொழிற்பிரிவுகளில் 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SCVT சான்றிதழ் தொழிற்பிரிவான திறன் மின்னனுவியல் தொழில்நுட்ப பணியாளர் (Technician Power Electronics System) 2 ஆண்டுகள் பிரிவில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாதந்தோறும் ரூ.500/- உதவித்தொகைஇ விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிகணினி, பஸ் பாஸ் வசதி, மகளிருக்கு உச்சகட்ட வயது வரம்பு இல்லை. மத்திய அரசின்; NCVT சான்றிதழ், விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி ஆண்டு தோறும், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா காலணிகள், மொழித்திறன் மற்றும் கணினி பயிற்சி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா அடையாள அட்டை வழங்கப்படும். இலவச விடுதி வசதி உண்டு.

ஐ.டி.ஐ-ல் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 16.08.2020 முதல் 15.09.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), முதல்வரை நேரிலோ அல்லது 0451 – 2470504 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு சேர்க்கை குறித்த விவரம் அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.