Close

Collector-Jamabhandhi

Publish Date : 25/06/2020

செ.வெ.எண்:-21/2020                                                                                           நாள்:-22.06.2020

திண்டுக்கல் மாவட்டம்

 

வருவாய் தீர்வாயத்தின் மூலம் தீர்வு பெற பொதுமக்கள் இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., தகவல்.,

திண்டுக்கல் மாவட்டத்தில் 1429ம் பசலி ஆண்டுக்குரிய வருவாய் தீர்வாயமானது அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 29.06.2020ம் தேதி முதல் 06.07.2020 வரை நடைபெற உள்ளது.  அரசாணை (நிலை) எண்.306,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை (வ.நி.3(2)), நாள்:17.06.2020 மற்றும் முதன்மைச் செயலர்/வருவாய் நிருவாக ஆணையர், சென்னை அவர்களின் கடித எண்.வ.நி.6(1)/11601/2020, நாள்:18.06.2020-ம் நாளிட்ட கடிதம் ஆகியவற்றில் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு இம்முறை பொதுமக்கள் அனைவரும் வட்டாட்சியர் அலுவலகம் வருவதை தவிர்த்து அவரவர் கிராமங்களில் உள்ள பொது சேவை மையங்கள் மற்றும் இணையதளம் மூலமாக தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை பதிவேற்றம் செய்து உரிய ஒப்புதல் பெற்றுச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், பொதுமக்களால் இணையதளம் மற்றும் பொது சேவை மையங்களில் வருவாய் தீர்வாயத்தின்போது அளிக்கப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட வருவாய் தீர்வாய அலுவலர்களால் பரிசீலனை செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரம் குறித்து மனுதாரர்களுக்கு இணைய தளம் மற்றும் கைபேசி வழியாக தகவல் அனுப்பி வைக்கப்படும் என மாவட்;ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலெட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.