Collector Joining Press Release

செ.வெ.எண்:-1/2019 நாள்:01.07.2019
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித்தலைவராக இன்று (01.07.2019) திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 2009 ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணியை சேர்ந்தவராவார். இவர் தனது விலங்கியல் பட்டப்படிப்பை முடிந்து 1992-இல் நகராட்சி ஆணையராக பணியில் சேர்ந்தார். சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, இராஜபாளையம் மற்றும் கரூர் ஆகிய நகராட்சிகளில் பணிபுரிந்தும், நகராட்சி நிர்வாகத் துறையில் திருப்பூர் மண்டல இணை இயக்குனராகவும், ஈரோடு மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராகவும் பணிபுரிந்து நகர்ப்புற நிர்வாகத்தில் பரந்த அனுபவம் பெற்றுள்ளார்.
இவரது பணிக்காலத்தின்போது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் ஈரோடு மாநகராட்சி 2012-13 ஆம் ஆண்டிற்க்கான “சிறந்த மாநகராட்சி” பரிசைப் பெற்றது மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மத்திய அரசின் “தூய்மை நகர கணக்கெடுப்பு” இல் தரக் கருத்துக் கணிப்பில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.
இவர் கோயம்புத்தூர் சார் ஆட்சியராகவும், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (சுகாதாரம்) ஆகவும் பணியாற்றியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் பிப்ரவரி 2018 முதல் ஜீன் 2019 வரை அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றி, இன்றைய தினம் 01.07.2019 திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.