Close

Collector- Grama Sabhai Meeting on account of Gandhi Jayanti

Publish Date : 04/10/2021
.

..செ.வெ.எண்:-06/2021

நாள்:02.10.2021

காந்தி ஜெயந்தி முன்னிட்டு, சிறுமலை புதூரில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சிறப்புப் பார்வையாளராக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டார்.

காந்தி ஜெயந்தி முன்னிட்டு இன்று(02.10.2021) திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை புதூரில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப.,அவர்கள் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்), திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்க வைத்தல் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுதுவதை ஊக்குவித்தல், திரவக் கழிவு மெலாண்மை திட்டம், விரிவான கிராம சுகாதார திட்டத்தைப் பற்றி விவாதித்தல், தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்-2021 குறித்து பொதுமக்களிடம் தெரிவித்தல், மின்சிக்கனத்தை கடைப்பிடித்தல், மின் சிக்கனம் தேவை இக்கணம், ஜல் ஜீவன் திட்டம், வாய்க்கால்களை சுத்தப்படுத்தும் இயக்கம், அனுமதியற்ற விளம்பரப்பலகைகள், விளம்பரத்தட்டுகள், பதாகைகளை அகற்றுதல், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா, கிராம வருமை ஒழிப்புத்திட்டம் தயாரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான சமூக தீன்மை நிராகரிப்பு உறுதி மொழி, குழந்தை திருமணத்தை தடுத்தல் உறுதிமொழி, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்(ஊரகம்), கற்றல் கற்பித்தல், கற்றல் இடைவெளியை குறைத்தல் போன்ற பொருள்கள் குறித்தும் இன்றைய தினம் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டும், அதனை பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொண்டும், தங்களது வாழ்வாதார முன்னேற்றிக் கொண்டு பயன்பெற வேண்டும். மேலும், தங்களது கிராமங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆகவே தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து கிராம வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

மேலும், இப்பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, சிறுமலை கிராம ஊராட்சி பலையூர் வெள்ளிமைல ஓடையில் MGNRREGS திட்டத்தின்கீழ், ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கீரீட் தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப.,அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

இதனை தொடர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கே எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதி மொழி மற்றும் குழந்தை திருமணத்தை தடுத்தல் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு.S.பிரபு,இ.வ.ப., அவர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ரெங்கராஜன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.பூங்கொடி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.புஷ்பகலா, இணை இயக்குநர் (தோட்டக்கலை) திரு.J.பெருமாள்சாமி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.சங்கீதா வெள்ளிமலை, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டனர்.

செய்திவெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,திண்டுக்கல்.