Collector – Kudimaramathu works inspection

Publish Date : 03/09/2019
1

செ.வெ.எண்:04/2019 நாள்:03.09.2019

திண்டுக்கல் மாவட்டம்

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் குளங்களை – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், கூவணூத்து ஊராட்சி, அஞ்சுகுழிப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணிகளை இன்று (03.09.2019) மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் நீர் வள ஆதாரங்களை மேம்படுத்திட தமிழகம் முழுவதும் பல்வேறு துரித நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில், தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், குடிமராமத்து திட்டத்தின்கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறு கட்டுமானம் செய்தல், நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட சீரமைக்கும் பணிகள் விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூவணூத்து ஊராட்சியில் பிச்சான்குளம் கண்மாய் ரூ.4.2 இலட்சம் மதிப்பீட்டிலும், அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சியில் புலவன் குளம் ரூ.2.64 இலட்சம் மதிப்பீட்டிலும் தூர் வாரும் பணிகள் முதலமைச்சரின் சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது. தூர் வாரும் பணி என்பது குளத்தில் உள்ள மண்ணை அள்ளி கரையினை பலப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பங்களிப்புடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் குடிமராமத்து பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

விவசாயிகளின் நலன் கருதியும், நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி பொதுமக்களின் குடிநீர்,விவசாய தேவையை நிவர்த்தி செய்யவும், தமிழக அரசால் போர்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்;பட்டு வருகிறது. இவ்வாறாக நடைபெற்று வரும் பணிகளை விவசாயிகளும் கண்காணித்து அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முழுஒத்துழைப்பு அளித்து, தங்களது பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கவிதா, உதவி செயற்பொறியாளர்கள் திரு.முருகபாண்டி, திரு.ராஜேஸ்கண்ணா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி வசந்தா, திரு.ரவீந்திரன் மற்றும் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.