Collector- Kudimaramathu works Press Tour (Nilakkottai Taluk)

Publish Date : 19/09/2019
1

செ.வெ.எண்:41/2019 நாள்:18.09.2019

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.6 கோடி மதிப்பீட்டில் 6 பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது – மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி. இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்; குடிமராமத்து திட்டத்தின்கீழ்; நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர் பயணத்தின் போது தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் மஞ்சளாற்று வடிநிலக்கோட்டம், பெரியகுளத்தின் எல்லைக்குள் திண்டுக்கல் மாவட்டத்தில் 8 பணிகள் ரூ.2.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாயிகளின் பங்களிப்போடு விவசாயி சங்கத்தினால் நல்ல முறையில் செய்து முடிக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் 34 பணிகள் ரூ.8.47 கோடிக்கு கீழ் கண்டவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாசன பிரி;வு, நிலக்கோட்டைக்கு 6 பணிகள் ரூ.2.6 கோடி மதிப்பீட்டிலும், பாசன பிரிவு நத்ததிற்கு 26 பணிகள் ரூ.4.87 கோடி மதிப்பீட்டிலும், பாசன பிரிவு கொடைக்கானல் 2 பணிகள் ரூ.1 கோடி மதிப்பீட்டிலும் நிர்வாக ஒப்புதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு விவசாயிகளின் பங்களிப்போடு அந்தந்த கண்மாயின் பாசன விவசாய சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் 807.72 ஹெக்;டர் பாசன நிலங்களில் நேரடியாக பாசன வசதி பெறும் மாண்புமிகு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் கண்மாய்களில் கண்மாய் தூர்வாரி கரையை பலப்படுத்தியும், வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி பாசன மடை, மறுகட்டுமான பணியும், பாசன வாய்க்கால் சிமெண்ட் வாய்க்கலாக மாற்றும் பணியும், மறுகால் மறுகட்டுமான பணியும், ஆக்கிரமிப்புகளை அகற்றி எல்லை கற்களை ஊண்டும் பணியும், செடி, கொடி அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், நிலக்கோட்டை வட்டம், மட்டப்பாறை கிராமம் கண்மாய் மாண்புமிகு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தில் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கண்மாய் பணிகள் மட்டப்பாறை கண்மாய் நீரினை பயன்படுத்துவோர், விவசாயிகளின் பங்களிப்போடு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கண்மாயில் தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணியும், வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி, பாசன மடை எண்-3 மறுகட்டுமான பணியும், ஆக்கிரமிப்புகளை அகற்றி எல்லை கற்களை ஊண்டும் பணியும் பாசன வாய்க்கால் சிமெண்ட் வாய்கால்களாக மாற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இக்கண்மாய் மாண்புமிகு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தில் மேற்கூறிய பணிகளை மேற்கொள்வது மூலம் வரும் மழை காலங்களில் பெறப்படும் நீர் வீணாகமல் கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டு, அதன் மூலம் நேரடியாக 148.40 ஏக்கர் முழுவதும் பாசனம் பெறும் பாசன வசதி பெறும். மேலும், மறைமுகமாக 150 கிணறு மற்றும் 70 ஆழ்துளை கிணற்றின் நிலத்தடி நீர் மட்டம் உயருவதன் மூலம் சுமார் 800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் மேலும், விலாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், முத்துராமலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் குடிநீர் வசதி பெறுவதுடன், மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

மேலும்,பிள்ளையார் நத்தம் கிராமத்திற்குட்பட்ட பிள்ளையார்நத்தம் கண்மாயில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கண்மாயில் மூலம் மழை காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாகமல் தேக்கி வைப்பதன் மூலம் 141.34 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதியும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதன் மூலம் 200 கிணறுகளும், 60 ஆழ்துளை கிணறுகளின் வாயிலாக 600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், அதனை சுற்றியுள்ள சிறுநாயக்கன்பட்டி, அணைப்பட்டி, சொக்குபிள்ளைப்பட்டி, நாட்டார்பட்டி மற்றும் கவுண்டன்பட்டி கிராமங்கள் குடிநீர் வசதி பெறும். இவ்வாறு மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் செய்தியாளர் பயணத்தில் தெரிவி;த்தார்.

இந்த ஆய்வின் போது, உதவி பொறியாளர் திரு.நீதிபதி, விவசாய சங்க பிரதிநிதிகள், ஆயக்கட்டு விவசாயிகள் மற்றும் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.