Close

Collector – Kudimaramathu Works

Publish Date : 30/07/2019
1

3

செ.வெ.எண்:81/2019 நாள்:30.07.2019
திண்டுக்கல் மாவட்டம்

பொதுப்பணித்துறை (ம) நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் நீர்நிலைகளை மறு சீரமைக்கும் பணியான குடிமராமத்து திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில்; ரூ.34.36 கோடி மதிப்பீட்டில்  மொத்தம் 114 பணிகளை பாசன விவசாயிகளின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர் பயணத்தில் தகவல்

திண்டுக்கல் மாவட்டம், பொதுப்பணித்துறை (ம) நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் நீர்நிலைகளின் மறு சீரமைக்கும் பணியான குடிமராமத்து திட்டத்தின் கீழ், நங்காஞ்சியாறு வடிநிலக்கோட்டம் மற்றும் மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து இன்று (30.07.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும், அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில், திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை எதிர்கொள்ளவும், நீர் வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும், தமிழக அரசு தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி பயனீட்டாளர்கள் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க, தமிழக அரசு உத்தரவிடப்பட்டு, அதன்படி கடந்தாண்டும், அதனை தொடர்ந்து நடப்பாண்டும் தமிழகம் முழுவதும் இப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

குடிமராமத்து திட்டப்பணி 2019-2020-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் நங்காஞ்சியார் வடிநிலக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள் வரத்து வாய்க்கால்கள் பராமரிப்பு செய்வதற்கு 80 குளங்களில் 80 பணிகளுக்கு ரூ.25.89 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் மஞ்சளாறு வடிநிலக்கோட்டம், பெரியகுளத்தின் கட்டுப்பாட்டில் 34 பணிகள் ரூ.8.47 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 114 பணிகள் 34.36 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில், நங்காஞ்சியார் வடிநிலக்கோட்டம், பழனி கட்டுப்பாட்டில் உள்ள பழனி சட்டமன்ற தொகுதியில் மொத்த 45 பணிகள் ரூ.17.64 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அதில் 6 கால்வாய்களில் தூர்வாருதல், செடி கொடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி மதகுகளை சீர் அமைக்கும் பணிகள், 40 குளங்களில் வரத்து வாய்க்கால்களில் குளம் மற்றும் குளக்கரைகளில் செடி கொடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்துதல், மதகுகளில் உள்ள அதைப்பான்களை பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளளப்படுகின்றன. இதன் மூலம் இப்பகுதியில் மொத்தம் 22,604 விவசாயிகள் பயனடைவார்கள்.

அதே போன்று, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மொத்த 11 பணிகளுக்கு ரூ.246.60 இலட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் 1 கால்வாயில் தூர்வாருதல், செடி கொடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி மதகுகளை சீர் அமைக்கும் பணிகளும் 10 குளங்களில் வரத்து வாய்க்கால்களில் குளம் மற்றும் குளக்கரைகளில் செடி கொடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்துதல், மதகுகளில் உள்ள அடைப்பான்களை பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் இப்பகுதியில் மொத்தம் 4054 விவசாயிகள் பயனடைவார்கள்.

ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மொத்த 15 பணிகளுக்கு ரூ.424.60 இலட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1 கால்வாயில் தூர்வாருதல், செடி கொடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி மதகுகளை சீர் அமைக்கும் பணிகளும் 14 குளங்களில் வரத்து வாய்க்கால்களில் குளம் மற்றும் குளக்கரைகளில் செடி கொடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்துதல், மதகுகளில் உள்ள அடைப்பான்களை பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்டுகின்றன. இதன் மூலம் இப்பகுதியில் மொத்தம் 5136 விவசாயிகள் பயனடைவார்கள்.

நத்தம் சட்டமன்ற தொகுதியில் மொத்த 1 பணிகளுக்கு ரூ.20.00 இலட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்வாய்களில் தூர்வாருதல், செடி கொடிகளை அகற்றி ஏ.வெள்ளோடு கிராமம் பெரியகுளம் கண்மாய் கரைகளை பலப்படுத்துதல் மதகுகளை சீர் அமைக்கும் பணிகளும் மதகுகளில் உள்ள அடைப்பான்களை பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் இப்பகுதியில்; மொத்தம் 310 விவசாயிகள் பயனடைவார்கள்.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் மொத்த 1 பணிகளுக்கு ரூ.25.00 இலட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்வாய்களில் உள்ள தூர்வாருதல், செடி, கொடிகளை அகற்றி அள்ளிப்பாடி கிராமம், முள்ளிப்பாடி பெரியகுளம் கண்மாய் கரைகளை பலப்படுத்துதல் மதகுகளை சீர் அமைக்கும் பணிகளும் மதகுகளில் உள்ள அடைப்பான்களை பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தால் மொத்தம் 705 விவசாயிகள் பயனடைவார்கள்.

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் மொத்த 7 பணிகளுக்கு ரூ.108.80 இலட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 7 கால்வாய்களில் தூர்வாருதல், செடி கொடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி மதகுகளை சீர் அமைக்கும் பணிகளும் 7 குளங்களில் வரத்து வாய்க்கால்களில் குளம் மற்றும் குளக்கரைகளில் செடி கொடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்துதல் மதகுகளில் உள்ள அடைப்பான்களை பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் இப்பகுதியில் மொத்தம் 2,809 விவசாயிகள் பயனடைவார்கள்.

இதே போன்று, குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடந்த நிதி ஆண்டில் மஞ்சளாறு வடிநில கோட்டம், பெரியகுளத்தின் எல்கைக்குள் திண்டுக்கல் மாவட்டத்தில் 8 பணிகள் ரூ.2.65 கோடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட் விவசாயிகளின் பங்களிப்போடு விவசாய சங்கங்களால் நல்ல முறையில் செய்து முடிக்கப்பட்டது.

நடப்பு நிதி ஆண்டில் 34 பணிகள் ரூ.8.47 கோடிக்கு கீழ்க்கண்டவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாசனப்பிரிவு, நிலக்கோட்டைக்கு 6 பணிகள் ரூ.2.6 கோடி மதிப்பீட்டிலும், பாசனப்பிரிவு, நத்தத்திற்கு 26 பணிகள் ரூ.4.87 கோடி மதிப்பீட்டிலும், பாசனப்பிரிவு, கொடைக்கானலுக்கு இரண்டு பணிகள் ரூ.1.00 கோடி மதிப்பீட்டிலும், நிர்வாக ஒப்புதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு விவசாயிகளின் பங்களிப்போடு அந்தந்த கண்மாயின் பாசன விவசாய சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் 807.72 ஹெக்டேர் பாசன நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும் முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளவிருக்கும் கண்மாய்களில் மராமத்து பணிகள் கண்மாய் தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணி,வரத்து கால்வாய் தூர்வாரும் பணி பாசன மடை மறுகட்டுமான பணி,பாசன வாய்க்கால் சிமெண்ட் வாய்க்காலாக மாற்றும் பணி,மறுகால் மறுகட்டுமானப்பணி,ஆக்கிரமிப்புகள் அகற்றி எல்லைக்கற்கள் ஊன்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

நடப்பு ஆண்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்ட பணிகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பள்ளபட்டி கிராமம், பொன்னன்குளம் கண்மாய் முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கண்மாய் பணிகள் பொன்னன்குளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கம் பங்களிப்புடன் பணிகள் துவங்கப்பட்டு தற்பொழுது பணிகள் நடைபெற்று வருகின்றன.

கண்மாய் தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணி,வரத்து கால்வாய் தூர்வாரும் பணி,பாசன மடை மறுகட்டுமான பணி, பாசன வாய்க்கால் சிமெண்ட் வாய்க்காலாக மாற்றும் பணி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இக்கண்மாயில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தில் மேற்கூறிய பணிகள் மேற்கொள்ளுவதன் மூலம் வரும் மழைக்கலங்களில் பெறப்படும் நீர் வீணாகாமல் கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டு, அதன் மூலம் பாசனம் பெறும் 18.02 ஹெக்டேர் நிலங்கள் நேரடியாக முழுவதும் பாசன வசதி பெறும். மேலும், மறைமுகமாக 75 கிணறு மற்றும் 20 போர்வெல்கள் மூலம் சுமார் 300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும், அதனைச்சுற்றியுள்ள கிராமங்களான கல்லடிப்பட்டி, முனியாண்டிபுரம், தாதன்குளம், மீனாட்சிபுரம் மற்றும் இதர கிராமங்களுக்கு குடிநீர் வசதி பெறுவதுடன் இக்கிராமங்களிலுள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

நடப்பு ஆண்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்ட பணிகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பிள்ளையார்நத்தம்; கிராமம், பிள்ளையார்நத்தம் கண்மாய் முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தில் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கண்மாய் பணிகள் பிள்ளையார்நத்தம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கம், சிறுநாயக்கன்பட்டி அவர்களால் 27.07.2019 அன்று பணிகள் துவங்கப்பட்டு தற்பொழுது பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கண்மாயில் கண்மாய் தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணி,வரத்து கால்வாய் தூர்வாரும் பணி, பாசன மடைகள் மறுகட்டுமான பணி, ஆக்கிரமிப்புகள் அகற்றி எல்லைக்கற்கள் ஊன்றும் பணி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இக்கண்மாயில், முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தில மேற்கூறிய பணிகளை மேற்கொள்ளுவதன் மூலம் வரும் மழைக்காலங்களில் பெறப்படும் நீர் வீணாகாமல் கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டு, அதன் மூலம் பாசனம் பெறும் 57.20 ஹெக்டேர் நிலங்கள் நேரடியாக முழுவதும் பாசன வசதி பெறும். மேலும் மறைமுகமாக 200 கிணறு மற்றும் 60 போர்வெல்கள் மூலம் சுமார் 600 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும், அதனைச்சுற்றியுள்ள கிராமங்களான சிறுநாயக்கன்பட்டி, அணைப்பட்டி, சொக்குபிள்ளைபட்டி, நாட்டார்பட்டி மற்றும் கவுண்டன்பட்டி கிராமங்களுக்கு குடிநீர் வசதி பெறுவதுடன் இக்கிராமங்களிலுள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
மேற்கண்டவாறு, குடிமராமத்து திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து தொப்பம்பட்டி அரண்மனை ஓடை குளம், வரத்து வாய்க்கால் மற்றும் பள்ளப்பட்டி கிராமம் பொன்னன்குளம் ஆகிய பகுதிகளில் செய்தியாளர்களுடன் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தின் நலன் கருதி பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கும் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கும் விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளித்து பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர் பயணத்தில் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் பயணத்தில் உதவி செயற்பொறியாளர்; (பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, மஞ்சளாறு-பெரியகுளம்) திரு.சௌந்தரம், உதவிப் பொறியாளர்கள் திரு.தங்கவேலு, திரு.நீதிபதி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இ.சாலிதளபதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.