Close

Collector – Pillamanayakanpatty Jallikattu Meeting.

Publish Date : 08/03/2022
.

செ.வெ.எண்:-17/2022

நாள்:08.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதை முன்னிட்டு,பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், பில்லமநாயக்கன்பட்டியில் ஸ்ரீகதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் 09.03.2022 அன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து,மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.03.2022) சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்துதல் தொடர்பாக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் இடத்தினை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளவும், ஜல்லிக்கட்டு மாடுகளை கால்நடைபராமரிப்பு மருத்துவர்கள் சோதனை மேற்கொள்ளவும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா எனவும், காவல்துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவும், தீயணைப்புத்துறையினர் உரிய பாதுகாப்பு மேற்கொள்ளவும், மருத்துவதுறையினர் மருத்துவ குழுவுடன் போதுமான மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், 108 ஆம்பலனஸ்; வாகனம் தயாரான நிலையில் இருக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.பில்லமநாயக்கன்பட்டியில் நடைபெறவிருக்கும் ஐல்லிக்கட்டு நிகழ்ச்சியினை எந்தவித இடையுறுமின்றி பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் நடத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) திருமதி சி.பிரியங்கா,இ.ஆ.ப., திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திருமதி சந்தனமேரி கீதா, கால்நடை பராமரிப்புத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.