Close

Collector Press Meeting

Publish Date : 18/08/2021

செ.வெ.எண்:-35/2021

நாள்:17.08.2021

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 100 நாட்களில் பொதுமக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோல், பல்வேறு நலத்திட்டங்களும் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 1857 மனுக்கள் வரப்பெற்றது. அந்த மனுக்களில் 928 மனுக்களின் உண்மைத்தன்மை அறியப்பட்டு அம்மனுக்களுக்கு உரிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. 228 மனுக்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறையில் 29 நபர்களுக்கு ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 51 மனுதாரர்களுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை ரூபாய் 6.12 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்களில் 26 நபர்களுக்கு அரிசி குடும்ப அட்டைகளும், வேலைவாய்ப்புத்துறை மூலம் வரப்பெற்ற 24 மனுக்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டும், ஊரகவளர்ச்சித்துறையின்கீழ் வரப்பெற்ற மனுக்களில் 113 மனுக்களுக்கு 13.56 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா கட்டுப்படுத்துதலைப் பொறுத்தவரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்பதை உணர்ந்து ஒரு வார காலக்கட்டத்திற்கு ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்றது. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் பொது இடங்களில் கூட்டங்கள் சேராமல் இருப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில், 825 படுக்கைகள் கொண்ட 11 கோவிட் கேர் சென்டர்மற்றும் கிராமப்புறங்களில் 355 படுக்கைகளுடன் 14 மினி கோவிட் கேர் சென்டர்கொரோனா இரண்டாவது அலையின்போது ஏற்படுத்தப்பட்டு தற்போது பயனாளிகள் இல்லாத நிலையில் கூட மூடப்படாமல் பயன்பாட்டில் உள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 90 ஐ.சி.யு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் குழந்தைகளுக்காக 30 படுக்கை வசதிகள் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை கவனத்தில் கொண்டு 2 ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும், 2 ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் இயந்திரங்கள் பழனி மற்றும் கொடைக்கானல் ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தி பழனியில் பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. கொடைக்கானலில் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

  • நோய்த்தடுப்பு நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 5.83 லட்சம் நபர்களுக்கும், இரண்டாவது தவணையாக 1.14 இலட்சம் நபர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

  • 1450 களப்பணியாளர்கள், 45 மருத்துவர்கள், 91 செவிலியர்கள் மூலம் கொரோனா தடுப்பு பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக 5 தற்காலிக சிகிச்சை மையங்கள், 570 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • சித்த மருத்துவ அடிப்படையில் 100 படுக்கை வசதிகளுடன் தற்காலிக சிகிச்சை மையம் 1 அமைக்கப்பட்டு, சிகிச்சைகள் வழங்கப்பட்டது.

  • 45,001 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 28 லட்சத்து, 88 ஆயிரத்து 122 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

  • நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட 10,196 நபர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் 660 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் மற்றும் 170 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

  • திண்டுக்கல் மாவட்டத்தில் 6,47,529 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 வீதம் ரூபாய் 259.01 கோடி வழங்கப்பட்டுள்ளது.

  • தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு அதிகமான சிகிச்சை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன என்ற தகவல்கள் கிடைத்ததன் பேரில் அவர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனை எடுத்துக்கூறி அதன் மூலம் ரூபாய் 10.03 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் காப்பீட்டு நிதியுதவி 939 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

  • மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டத்தின்கீழ் கொரோனா நிவாரண உதவியாக 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 6,47,305 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 28.72 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

  • புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1838 நபர்களுக்கு முழு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டைகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 10958 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வரப்பெற்று அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

  • தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது கொரோனா தடுப்புப் பணியில் கடமையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட முன்களப் பணியாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில், ஊக்கத்தொகையினை வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

  • காவல்துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 2,059 காவல்துறையினருக்கு ரூ.5,000/-வீதம் ரூ.1,03 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

  • மருத்துவர்களுக்கு தலா ரூ.30,000/- வீதம் ஊக்கத் தொகையும், செவிலியர்களுக்கு ரூ.20,000/- வீதம் வழங்கவும், இதரப் பணியாளர்களுக்கு தலா ரூ.15,000/- வீதம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ரூ.5 இலட்சம் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 6 நபர்கள் பயனடைகின்றனர்.

  • கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தின்கீழ் 37 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

  • அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா ரூ.3000 உதவித் தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கும் திட்டத்தின்கீழ் 2 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண சலுகை அமல்படுத்தப்பட்டதன் அடிப்படையில் தினசரி 1,41,309 மகளிர் பயன்பெறுகின்றனர்.

  • மாற்றுத்தினாளிகள் மற்றும் உதவியாளர், திருநங்கைகளுக்கு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை அமல்படுத்தப்பட்டதன் அடிப்படையில் தினசரி 1190 பேர் பயன் பெறுகின்றனர்.

  • திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதரவற்ற விதவைகள் சான்று 37 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • குடும்ப அட்டை பெறாத திருநங்கையர்களுக்கு ரூ.2000 கொரோனா கால உதவித்தொகை 96 திருநங்கையர்கள் பயன்பெற்றுள்ளனர்.

  • திண்டுக்கல் மாவட்டத்தில் 2 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அடையாள அட்டை பெறாத திருநங்கையர்கள் மருத்துவ உளவியல் நிபுணர் மூலம் வழங்கப்படும் திருநங்கையர்கள் முதல் நிலை மருத்துவ சான்றிதழ் 27 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • திருக்கோயில்களில் நிலையான மாதச்சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகையாக தலா ரூ.4000 வீதம் 155 நபர்களுக்கு ரூ.6,20,000 மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.

  • 10 கிலோ அரிசி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 6,47,073 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.

  • மலைப் பகுதி கிராமங்களில் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் பழனி ஆகிய கோட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, திண்டுக்கல் கோட்டத்தில் 268, கொடைக்கானல் கோட்டத்தில் 10, பழனி கோட்டத்தில் 27 என மொத்தம் 305 நபர்களுக்கு பழங்குடியினர் இன சான்று வழங்கப்பட்டுள்ளது.

  • கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வாயிலாக, பெரியாறு பாசன பகுதியில் ஒரு போக பாசன நிலங்களான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 200 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும்.

  • திண்டுக்கல் மாவட்டத்தை பசுமையானதாக மாற்றும் நோக்கில், தன்னார்வலர்கள் மூலமாகவும், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் 5 இலட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 35000 மரக்கன்றுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலமாகவும், தன்னார்வலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உதவியுடன் நடப்பட்டுள்ளன.

  • மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் வடமதுரை, நிலக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் 45 வயதிற்கு மேற்பட்ட 10,780 தொற்றா நோயாளிகள் கண்டறியப்பட்டு இதில் 3832 நபர்களுக்கு வீடு தேடி இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள நபர்களுக்கு வீடு தேடி மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • சிறுகுறு விவசாயிகளுக்கான நுண்நீர் பாசனம் அமைக்க, 40 குறு வட்டங்களில் கடந்த 11.08.2021 மற்றும் 12.08.2021 ஆகிய தேதிகளில் நடந்த சிறப்பு முகாமில் 1454 மனுக்கள் பெறப்பட்டு, 1156 விவசாயிகளுக்கு சிறுகுறு விவசாயி சான்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

செய்தியாளர் சந்திப்பில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி பிரியங்கா,இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.