Collector- Prize Distribution

செ.வெ.எண்:-13/2022
நாள்: 07.05.2022
திண்டுக்கல் மாவட்டம்
திருக்குறள் குறளோவியப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப.,அவர்கள் வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் “தீராக் காதல் திருக்குறள்“ என்ற தலைப்பில் தீந்தமிழ் நிகழ்ச்சிகளை தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கென ”குறளோவியம்“ என்ற பெயரில் ஒவியப்போட்டி மாநில அளவில் நடைபெற்றது.
இந்தப்போட்டியில் 365 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இக்குறளோவியப் போட்டியில் தேர்வ செய்யப்பட்ட 365 ஓவியங்கள் திருக்குறன் குறளோவியம் தினசரி நாட்காட்டிப் புத்தகமாக அச்சிடப்பட்டு, பொமக்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்று சிறப்புப் பரிசு பெறும் 40 மாணவர்களுக்குத் தலா ரூ.5000, ஊக்கப்பரிசு பெறும் 319 மாணவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் திருக்குறள் குறளோவியப் போட்டியில் பரிசு பெற்ற திண்டுக்கல் அக்னி கட்டடக்கலை பள்ளி மாணவர் பி.வீரமணிகண்டன், பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி வி.சக்திவர்சினி, வத்தலகுண்டு மகாலட்சமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி ஜே.பா.ஜெபஸ்ரீ, திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளி பிளஸ் 2 மாணவி ரெ.பி.மேகவர்சிதா, திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்2 மாணவிகள் மு.அக்சுதா, ரா.காமாட்சி, செந்துறை எஸ்.எப்.எஸ். உயர்நிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவர் செ.ஹேமந்த்மணி என 7 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழ்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(07.05.2022) வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.இளையேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.